சுவிட்சர்லாந்து – இத்தாலி இடையே 2 மணி நேரத்தில் பயணிக்கும் கேபிள் கார் சேவையை பயன்படுத்த சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றதாக தெரிவிக்கபப்டுகின்றது.

ஆல்ப்ஸ் மலை தொடரின் Matterhorn சிகரம் வழியாக ஸ்விட்சர்லாந்தின் Zermatt இற்கும் இத்தாலியின் Cervinia பகுதிகளையும் இணைக்கும் வகையில் இந்த கேபிள் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

1 மணி நேரத்தில் 1300 பேர் வரை பயணம்

கடல் மட்டத்தில் இருந்து 3,900 மீட்டர் தொலைவில் பனி சூழ்ந்த மலை பிரதேசத்தில் பயணிக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 1 மணி நேரத்தில் 1300 பேர் வரை பயணம் செய்யலாம் என கூறப்படுகின்றது.

அதோடு ஒரு கேபிள் காரில் 28 பேர் வரை அமரும் வகையில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதுடன் 2 மணி நேரத்தில் 9 ஸ்டேஷன்கள் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையேற்றம், மலை சறுக்கு, கோல்ப் விளையாட வசதிகள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் இந்த பயணம் மறக்க முடியாத நினைவுகளை தருவதாக தெரிவித்தனர். 

அதேசமயம் சாகச விரும்பிகளுக்கு இந்த பயணம் உற்சாகத்தை தந்தாலும் இது காலநிலை மாற்றத்துக்கு எதிரானது என சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்