
தற்போது இதன் பெயரை ஶ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.
ஐந்நூறு தூண்களும், ஏழு கோபுரங்களும் கொண்ட கோவில் எனவும், தற்போது இலங்கையிலேயே மிகவும் பிரமாண்டமான கோவிலுமென இந்தக்கோயில் காணப்படுகின்றது.
ஆனால் இங்கே சில விடயங்கள் மற்றைய கோவில்களில் இருந்து
மாறுபட்டிருப்பதுடன் அனைவரையும் கவர்ந்திருந்தது.
1)முதலில் அந்தக் கோவில் அமைந்திருந்த இடமும், கடற்கரையில் அமைந்திருந்த அந்த சூழலும் மிகவும் அழகாக பொருந்தியிருந்தது.
2) கோவிலுக்கு மிக அருகாமையில் தேடித்திரியாதவாறு கட்டப்பட்டிருந்த கழிவறைகள்,
யாரையும் கேட்டுத்திரியாமல் கோவில் வீதியிலேயே அமைந்திருக்கும் சகல வசதிகளும் கொண்ட கழிவறைகள்.
ஒவ்வொரு கழிவறைக்கும் நீர் வசதியும் காணப்பட்டது தனிச்சிறப்பு.
3) மிக அருகாமையில் காணப்படும் அன்னதான மடம்.
காற்று வாங்கிக் கொண்டு எல்லாக் களையும் தீர படுத்துறங்குவதற்கான இடங்கள்.
4) கோவிலின் உள்ளே புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக ஆங்காங்கே பல பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது மக்களும் அதனை பின்பற்றுகின்றனர்.
5) மக்களை வற்புறுத்தி அங்கு எதனையும் செய்யும்படி கூறவில்லை.
6) தேவையான அளவு தரிப்பிட வசதி செய்திருக்கிறார்கள்.
7) இன்னுமொன்று இந்த ஊர் மக்களின் ஒற்றுமை.
எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த கோவிலை அமைத்திருப்பதன் மூலம் ஊர் ஒற்றுமையை மக்கள் பறைசாற்றி இருக்கிறார்கள்.
8) அதுமாத்திரம் இல்லாமல் அதிகளவான மக்கள் புலம் பெயர் தேசங்களில் இருந்து வந்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டதையும் சிறப்பான ஒரு அம்சமாக கருத வேண்டும்.
9) கோவில் நிர்வாகத்தால் அம்பாளின் பெயர் கொண்டு ஒரு அம்புலன்ஸ் வசதியும் செய்திருக்கிறார்கள்.
புங்குடுதீவு மக்கள் தங்கள் ஒற்றுமைமூலம் தமது பாரம்பரியத்தையும், பரம்பரையையும் காத்திருக்கிறார்கள்,காட்டியருக்கிறார்கள்.
நீ பெரிது, நான் பெரிது என்று போட்டி போடாமல் ஒற்றுமையாய் சேர்ந்து நின்று ஒரு விடயத்தை சாதித்திருக்கிறார்கள்.
தனித்தனியாக நின்று பெருமை காட்டாமல் கூட்டாக இணைந்து கோடிக்கணக்கில் செலவு செய்து இருக்கிறார்கள்.










