கனடா தேசிய கராத்தே சுற்றுப்போட்டி‌ 2023 இன் மத்தியஸ்தராக இலங்கை தமிழர்எஸ்.மனோகரன் பங்கேற்றுள்ளார்.

கனடாவின் தேசிய கராத்தே சுற்றுப்போட்டி – 2023 கியூபெக் மாநிலத்தின் லவாலில் அண்மையில் இடம்பெற்றது. இதில் கனடாவின் பல மாநிலங்களில் வெற்றிபெற்று தெரிவான வீர, வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தனர்.

அதில் இலங்கை தமிழரான எஸ்.மனோகரன் கனடா தேசிய மத்தியஸ்தர் தரத்தில் சித்தியடைந்து, இந்த சுற்றுப்போட்டியில் மத்தியஸ்தராகவும் கடமையாற்றியுள்ளார்.

இந்நிலையில் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு இந்த கௌரவம் கனடா வாழ் இலங்கைதமிழர்கள் மட்டுமன்றி புலம் பெயர் ஈழத்தமிழர்களும்மும் மகிழ்ச்சியியை ஏற்படுத்தியுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்