காலத்தின் தேவை கருதி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐக்கியநாடுகள் மனித உரிமை சபை முன்றலில் நோக்கிய பேரணிக்காக – 18.09.2022 (திங்கட்கிழமை)
ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் அனைத்து தமிழர்களையும் உரிமைக்காகவும் நீதிக்காகவும் ஒன்றுசேருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

வருடம்தோறும் இருதடவைகள் ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பமாகி ஜெனீவா ஐக்கியநாடுகள் மனித உரிமை சபை முன்றலில் அமைந்துள்ள ஈகைப் பேரொளி முருகதாசன் திடல் வரை பேரணியாக இடம்பெறுகின்ற கவனயீர்ப்பு போராட்டமானது கடந்த 3 வருடங்களில் உலக சூழலில் ஏற்பட்ட கோரோனா தொற்று தடுப்பு நடைமுறைகளுக்காக சுவிஸ் நாட்டின் சட்டநடைமுறைகளுக்கு உட்பட்டு ஜெனீவா ஐக்கியநாடுகள் மனித உரிமை சபை முன்றலில் அமைந்துள்ள ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் மாத்திரம் ஒரு கவனயீர்ப்பு நிகழ்வாக குறிப்பிட்ட அளவிலான மக்களுடன் இடம்பெற்றிருந்தது.

மீண்டும் இவ்வருடம் செப்ரம்பர் மாதம் இடம்பெற உள்ள கவனயீர்ப்பு போராட்டமானது பேரணியாக வழமைபோன்று பூங்காவில் இருந்து ஐ.நா முன்றலை நோக்கி இடம்பெற உள்ளது எனவே புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரையும் தமிழர்களுக்கு ஏற்பட்ட தமிழின அழிப்பிற்கு நீதி கோரவும், தமிழர்களுக்கான தீர்வு தமிழீழமே அதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தவும் கோரும் தமிழர்களின் கோரிக்கைகளை உலகிற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் அங்கம் வகிக்கின்ற நாடுகளுக்கும், அவைக்கும் வலியுறுத்த அனைவரையும் அழைக்கின்றனர்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த மீண்டுமொருமுறை அணி திரள்வோம்.

குறிப்பு: பயண ஒழுங்குகளுக்கு ஏனைய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் உங்கள் நாட்டின் தமிழர் ஒருங்கிணப்பு குழுவினரை நாடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்