
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் உப அமைப்பான தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையால் 32வது தடவையாக இடம்பெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ண் மாநிலத்தில் கடந்த 08.07.2023, 09.07.2023 (சனி,ஞாயிறு) அகிய இரு தினங்களில் இளையோர் பல்வேறு வயதுப்பிரிவுகளில் சிறுவர்கள், இளையவர்கள், முதியவர்கள் உள்ளடக்கி உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கட் போட்டிகள் என சுவிஸ் நாட்டின் அனைத்து மாநிலங்களின் அணிகளின் பங்குபற்றலுடன் வெகுசிறப்பாக இடம்பெற்றிருந்து .
இருநாட்களும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி தமிழீழ தேசிய கீதம் ஒலிக்க தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு உரிய மரியாதையுடன் அவர்களின் தியாகங்களையும் தமிழர்களின் தாயக கனவினை இளைய தலைமுறையினருக்கு கடத்தும் வண்ணம் தெளிவூட்டலுடன் சிறப்பாக நிறைவுக்கு வந்திருந்திருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.