
இத்தாலி வல்திலானா நகரசபை 100 ஆண்டுகளாக இடம்பொயர்ந்தவர்கள் எனும் தலைப்பில் 08/07/2023 அன்று வேற்றின மக்களையும் இத்தாலி மக்களையும் துறைசார் சமூக ஆர்வலர்களையும் இணைத்து மாலை 5 மணிக்கு மகாநாடும் இரவு 8மணிக்கு பல்லின மக்களின் உணவு பரிமாற்றமும் இடம்பெற்றது.
இம்மகாநாட்டில் ஈழத்தமிழர் எமக்கு முக்கிய இடம் தரப்பட்டது. வல்திலானா நகரசபையானது தொடர்ச்சியாக எமது மக்களுக்கு தேவையான அனைத்து விடையங்களிலும் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் முதல் முதலாக ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றியவர்கள்.







