
இன்று 09.07.2023 நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை – 28 ஆவது நினைவேந்தல்.
நவாலி தேவாலயத் தாக்குதல் என்பது 1995ம் ஆண்டு ஜூலை 9 இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதலைக் குறிக்கும். இத்தாக்குதலில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 150 பேருக்கு மேல் காயமடைந்தனர்.







நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமானத் தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது.
சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் நினைவேந்தல் நடைபெற்றது. இவ் நினைவேந்தலில் மகளிர் அணித் தலைவி திருமதி வாசுகி சுதாகர் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனார். அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.