
தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளையின் ஒழுங்குபடுத்தலில் நேற்றைய தினம் (05.07.2023) முதற்கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 36வது ஆண்டு நினைவுகளோடு வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களான தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்து சுவிஸ் நாட்டின் தலைநகராகிய பேர்ண் மாநிலத்தில் எழுச்சியுடன் கரும்புலிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
நிகழ்விற்கு சுவிஸ் நாட்டின் பல பாகங்களில் இருந்து பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த மாவீர செல்வங்களுக்கு வணக்கம் செலுத்தியிருந்தனர்.
நிகழ்விலே கரும்புலிகளின் அர்பணிப்புகள், வாழ்க்கை முறைகள், தியாகங்கள் அவர்கள் எதற்காக தங்கள் இன்னுயிரை ஆகுதியாக்கினார்களோ அந்த உன்னத இலச்சியத்தை மனதில் சுமந்து புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் பயணிக்க வேண்டும் எனும் நோக்குடன் அவர்களுடன் பயணித்து தற்போது உயிர் தப்பி வாழும் சகபோராளிகளின் அனுபவப்பகிர்வும், இளையவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்று தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவிற்கு வந்தது.
நிகழ்வின் நிழல்தடங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.






























