முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை, ஆதிசிவன் ஐயனாருக்கு இம்மாதம் 14ஆம் திகதி பொங்கல்வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 

இந்த பொங்கல் வழிபாடுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்களுடைய குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தாலும், ஏற்கனவே நீதிமன்றக் கட்டளையின்படி சைவவழிபாடுகள் மேற்கொள்ளலாம் என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய நாங்கள் எல்லோரும் இம்மாதம் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை, கலை 09மணிக்கு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் இருந்த இடத்தில் ஒரு பொங்கல் வழிபாட்டினை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளோம். அனைவரையும் அந்த பொங்கல் வழிபாட்டில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்