TMVP என்று அழைக்கப்படுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் அல்லது சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அவரது தலைவராக இருந்த கருணாவும் மேற்கொண்ட படுகொலைகளை பற்றிய விபரங்களை பல ஆண்டுகளுக்கு பின்னர் வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.

அவரது எழுத்துமூலமான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது:

ஏன் 2008ல் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு போட்டியிடவில்லை.

2004,பெப்ரவரி,06, பாராளுமன்றம் கலைப்பு.

2004, மார்ச்,06, ல் விடுதலைப்புலிகளில் இருந்து கருணா பிரிவு,

2004,ஏப்ரல்,02 பாராளுமன்ற தேர்தல்.
வடக்கு கிழக்கில் இருந்து 22, தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு..!

2004,ஏப்ரல்,09, தொடக்கம் விடுதலைப்புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையே மோதல் சம்பவம் ஆரம்பம்.

2004, ஏப்ரல்,15,ல் கிழக்கு மாகாணம் முழுவதும் தமது கட்டுப்பாட்டுக்கு வந்ததாக விடுதலைப்புலிகள் அறிவிப்பு.

2004, ஏப்ரல்,20,ல் தமிழ்தேசிய கூட்டமைப்பு 22, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் சந்திப்பு.

2004,மே,24,ல் வெலிகந்த வீதியில் அம்பாறை மு.பா.உ, சந்திரநேரு உட்பட மட்டக்களப்பு அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் மேலும் ஆறு போராளிகள் சுட்டுக்கொலை.

2004, மே,24,ல் மட்டக்களப்பில் கிழக்குபல்கலைக்கழக விரிவுரையாளர் கு.தம்பையா சுட்டுக்கொலை.

2004,மே,31,ல் மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஐ.நடேசன் கொலை.

2004,மே தொடக்கம் வடக்கு கிழக்கு எங்கும் இராணுவ கெடுபிடிகள் அச்சுறுத்தல்கள், குறிப்பாக கிழக்குமாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் கருணாகுழு இராணுவத்துடன் இணைந்து தமிழ் தேசிய பற்றாளர்களை இலக்கு வைத்து கடத்தல், கப்பம் வாங்குதல் கொலை மிரட்டல் தொடர்நதன

இதன் காரணமாக தமிழ்தேசிய கூட்டமைப்பு 22, பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாது கொழும்பில் முடக்கப்பட்ட காலம்..!

2005,ஏப்ரல்,24,ல் கொழும்பில் மட்டக்களப்பு ஊடகவியலாளர் த.சிவராம் கடத்திக்கொலை.

2005, டிசம்பர்,25,ல் மட்டக்களப்பு பா.உ, ஜோசப்பரராசசிஙகம் தேவாலயத்தில் கொலை.

2006,ஐனவரி,30,ல் வெலிகந்தயில் தமிழர் புனர்வாழ்வு(TRO) பணியாளர்கள் கா.கணேசலிங்கம்,த.பிறேமினி,த.வசந்தராசா,ச.சுஜிந்திரன்,கை,ரவிந்திரன்,அ.சதிஷ்கரன்
ஆகியோர் கடத்தப்பட்டு கொலை.

2006,ஏப்ரல்,07,ல் ஜோசப்பரராசசிஙகம் வெற்றிடத்திற்கு நியமிக்க இருந்த திருகோணமலை விக்கினேஷ்வரன் திருகோணமலை வங்கியின் முன் சுட்டுக்கொலை

2006,ஆகஷ்ட்,04,ல் திருகோணமலை மூதூரில் 18, மனிதாபிமானப்பணியாளர்கள் சுட்டுக்கொலை.

2006,நவம்பர்,10,ல் கொழும்பில் யாழ்மாவட்ட பா.உ, நடராசா ரவிராஜ் வீதியில் மறித்துக்கொலை.

2006,டிசம்பர்,15,ல் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரவிந்திரநாத் கொழும்பில் கடத்தல். வெலிகந்த தீவீச்சேனையில் கொண்டுசென்று கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

2007,ஆகஷ்ட்,21, வாழைச்சேனை ஓட்டமாவடியில் ஜெயானந்தமூர்த்தி பா.உ, சகோதரர் காகித ஆலைக்கு சமீபமாக சுட்டுக்கொலை.

2007,செப்டம்பர்,20,ல் திருகோணமலை மூதூர் பிரதேச சபை உறுப்பினர் எம்.சௌந்தரராஜாவின் சகோதரர் பரம்சோதி தனது வீட்டுக்கு அருகாமையில் சுட்டுக்கொலை.

2008,ஐனவரி,01,ல் கொழும்பில் மகேஷ்வரன் பா.உ(ஐ.தே.க) .பொன்னம்பலவாணேசர் கோயிலில் வைத்து சுட்டுக்கொலை.

2008, மார்ச்,03,ல் வன்னி ஏ,9, வீதியில் யாழ் பா.உ சிவநேசன் கிளைமோர் தாக்குதலால் பலி.
ஆகியோர் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுவால் படுகொலை செய்யப்பட்டனர்

அதைவிட…

2007,நவம்பர்,11,ல் மட்டக்களப்பு பா.உறுப்பினர்களான நான்(பா.அரியநேத்திரன்), த.கனகசபை, சே. ஜெயானந்தமூர்த்தி, க. தங்கேஷ்வரி மூவருக்கும் தொலைபேசியில் ஒரேநாளில் எச்சரிக்கை.
பாராளுமன்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் மீறி சென்றால் மட்டக்களப்பில் உங்கள் பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்களை கடத்துவோம் கொலைசெய்வோம் என கூறப்பட்டது.

இதனால் எனது மகள் மட்டக்களப்பு வின்சனட் மகளீர் கல்லூரியில் க.பொ.த( சாதரணதர) பரீட்சையில் இரண்டு பாடங்கள் தோற்றிய நிலையில் ஏனைய பாடங்களில் அந்த வருடம் பரீட்சை எழுதாமல் இடையில் விட்டார்.
எனது மகன் மட்டக்களப்பில் இருக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

2007,நவம்பர்,19,ல் களுதாவளையில் கனகசபை பா.உ, மருமகன் கடத்தப்பட்டார்.
வரவு செலவு முதலாம் வாக்கெடுப்பில் கனகசபை பா.உ, கலந்து கொள்ளவில்லை அவரின் மருமகன் களுதாவளையில் கடத்தியவர்கள் பாதுகாப்பு தரப்பின் உதவியுடன் கொழும்பு மாதிவெல பா.உ, விடுதியில் கனகசபை பா.உ, மருமகனை விட்டு சென்றனர்.

2007,டிசம்பர்,11,ல் இரண்டாவது வாக்கெடுப்பு இடம்பெறும் நாளில் எனது அண்ணர் நிர்வாக அலுவலர் பா.ஶ்ரீஸ்கந்தசெயா, தங்கேஷ்வரி பா.உ, நிர்வாக செயலாளர் ஆரையம்பதி அன்புமணி, ஜெயானந்தமூர்தியின் அக்காவின் மகன் ஆகியோர் கடத்தப்பட்டனர்.

2007,டிசம்பர்,14,ல் இறுதி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என அறிந்த பின்னர் அவர்கள் விடுதலையானார்கள், அவர்களை கடத்திவைத்தவர்கள் பிள்ளையான் குழுவினர் என்பது உண்மை.

இதே காலம்பகுதியில் மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பலர் கடத்தப்பட்டும் கொலைசெய்யப்பட்டும் ஒரு பீதி நிலை தொடர்ந்தது.

தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்குமாகாணசபை தேர்தலில் போட்டியிட விடக்கூடாது என்ற திட்டமிட்ட சதியும், அச்சுறுத்தலகளும், கொலைகளையும், கடத்தல்களையும்,பயமுறுத்தல்களையும் ஏவிவிட்டே கிழக்குமாகாணசபை தேர்தல் இடம்பெற்றது

2008, ஏப்ரல்,10, கிழக்குமாகாணசபை தேர்தல் இடம்பெற்றது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு அறிவிப்பை 2008,பெப்ரவரியில் கோரப்பட்டபோது கொழும்பில் மாதிவெல பா.உ விடுதியில் 22, பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆறுதடவை கூடி ஆராய்ந்தோம்.
தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற நிலைப்பாடு அனேகமானவர்கள் கூறினர் ஆனால் கிழக்கு மகாணத்தில் இருந்து எவருமே வேட்பாளர்களாக வர சம்மதிக்கவில்லை குறிப்பாக மட்டக்களப்பில் பலரை கேட்டோம் மறுத்தனர்.

பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்மை பதவி விலகி கிழக்கு தேர்தலில் போட்டியிடலாம் என்ற கருத்து வந்தது அதனை நாம் ஏற்றுக்கொண்டோம் குறிப்பாக நான் ஏற்றுக்கொண்டேன் ஆனால் ஏனையவர்கள் எவரும் மாவட்டத்தில் இருந்து வரமாட்டோம் எனவும் விரும்பினால் பிரசாரத்துக்கும் மட்டக்களப்புக்கு வரவேண்டாம் அப்படி மீறி வந்தால் பலரை சுட்டுக்கொல்வார்கள் என கட்சி உறுப்பினர்கள் பலர் கூறினர்.

இதன் காரணமாகவே 2008, ல் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடவில்லை
பயத்தால் போட்டியிடவில்லை என்பதை வெளியில் கூறமுடியாத உண்மை காரணத்தால் இணைந்த வடக்கு கிழக்கு மகாணங்களை பிரித்து கிழக்கில் இடம்பெறும் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மீண்டும் சொல்கிறேன் 2008, தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டிருப்பின் பல உயிர்களை நாம் இந்திருப்போம். அப்படியான மிக மோசமான காட்டு மிராண்டி ஆட்சியே 2008, ல் இலங்கையில் இருந்தது.

பா.அரியநேத்திரன்.
(04/07/2023)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்