
வட தமிழீழம் :-
தையிட்டியில் தனியார் காணியில் திஸ்ஸ விகாரை என்கின்ற பெயரில் சிங்கள அரசு மேற்கொண்ட பௌத்த மயமாக்கலுக்கு எதிராக கடந்த (22.05.2023) ஆம் திகதியில் இருந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது, போராட்டக்காரர்களையும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களையும் அங்கிருந்த, கான்ஸ்டபிள் தரமுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்ட நிலையிலும் தொடர்ந்து போராட்டம் நடந்தது
அதனை தொடர்ந்து மூன்றாம் கட்டமாக 03.06.2023 அன்று தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு பௌத்த மயமாக்கலுக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து.
நான்காம் கட்டமாக நேற்றைய தினம் (02) மீண்டும் ஆரம்பமாகிய போராட்டம் நள்ளிரவை கடந்தும் இன்றைய தினத்திலும் தொடருகின்றது
போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
போயா தினத்தினை முன்னிட்டு தையிட்டி விகாரையில் நடைபெறும் வழிபாடுகள் மற்றும் சிங்கள மக்களின் வருகையினை தடுக்கும் நோக்கிலும் விகாரையை அகற்றக் கோரியும் குறித்த பௌத்த மயமாக்கல் எதிர்ப்புப் போராட்டம் தையிட்டிப் பகுதியில் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய நாளில் சிங்கள காவல்துறை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றது
முக்கிய குறிப்பு :-
. இலங்கை முழு வதும் புத்தர் அருளால் சிங்களவர்களுக்கு தரப்பட்ட புனிதபூமி என்பன தர்மதீபக் கோட்பாட்டின் முக்கிய அம்சங்களாகும். சிங்கள இனவாதத்தின் மூலப்பொருள் தர்மதீபக் கோட்பாடு (THE DHRAMA DEEPA CONCEPT) என்ற காரணத்தால் தமிழர்களுடைய இன, மொழி உள்ளிட்ட உரிமைகளையும் தாயகக் கோட்பாட்டையும் அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இனம், மொழி, மதம், மண் ஆகிய நான்கின் மொத்த வடிவமாகப் புத்தர் சிலை விவகாரம் உருவெடுத்துள்ளது. மூடனும் முதலையும் கொண்டது விடாஎன்பார்கள். இந்த நாட்டின் இன்றைய வரலாற்றை விளக்க இது போதுமானது.
