
- 1957, பண்டா,செல்வா ஒப்பந்தம் (மாநில சபை)
தன்னிச்சையாக ஶ்ரீலங்கா அரசினால் கைவிடப்பட்டது. - 1965,டட்லி,செல்வா ஒப்பந்தம். (மாவட்ட சபை)
தன்னிச்சையாக ஶ்ரீலங்கா அரசினால் கைவிடப்பட்டது. - 1970, இலங்கைத்தமிழ் அரசுக்கட்சினால் முன்மொழியப்பட்ட தீர்வுத்திட்டம் ஶ்ரீலங்கா அரசினால் நிராகரிக்கப்பட்டது.(இந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்ட போதுதான் தந்தை செல்வா இனி தமிழ்மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என கூறினார்)
- 1976, மே,14,ல் வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழர் விடுதலை கூட்டணி மூலம் தந்தை செல்வா சுதந்திர தமிழீழம் என்பதை நிறைவேற்றினார்.(இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் ஆரம்பம்)
- 1979,ஜனாதிபதி ஆணைக்குழு (மாவட்ட முன்னேற்ற சபை)
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் ஶ்ரீலங்கா அரசு நிராகரித்தது. - 1981,ல் மாவட்ட அபிவிருத்தி சபை அறிமுகம் தேர்தல்.
இது உள்ளூராட்சி சபைக்கான அதிகாரம் போன்றது என்பதால் தமிழ் இளைஞர் பேரவை எதிர்த்தது, ஆனால் தமிழர் விடுதலை கூட்டணி தேர்தலில் பங்கு பற்றியது.ஆனால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. - 1983, சர்வ கட்சி மாகாநாடு ( மாவட்ட ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் முன்மொழியப்பட்டது)
தமிழர் விடுதலை கூட்டணி இதனை நிராகரித்தது. - 1985,திம்பு பேச்சுவார்த்தை (தாயகம், தேசியம் , சுயநிர்ணயம், சம உரிமை)
ஶ்ரீலங்கா அரசினால் நிராகரிக்கப்பட்டது. - 1986, டிசம்பர்,19,ல் இந்திய பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட திட்டம்.
ஶ்ரீலங்கா அரசு தீர்வில் இருந்து பிற்வாங்கியது. - 1987, யூலை,29,ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் (மாகாணசபை, வடகிழக்கு தற்காலிக இணைப்பு)
இந்த 1989,நவம்பர்19,ல்நடைபெற்ற தேர்தலை விடுதலைப்புலிகள், தமிழர் விடுதலை கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் என்பன நிராரித்தன,
ஈபீஆர்எல்எவ் கட்சியை இந்திய அமைதிப்படை வெல்லவைத்தது, முதலமைச்சரான வரதராஜப்பெருமாள் 1990,அக்டோபர்,24,ல் தமிழீழத்தை பிரகடனப்படுத்திவிட்டு இந்தியபடையுடன் தப்பி ஓடினார்.
18, வருடங்களால் 2006,அக்டோபரில் ஶ்ரீலங்கா அரசினால் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது. - 1989, 90, களில் ஜனாதிபதி ஆர். பிரமதாசவுடனான பேச்சு வார்த்தைகள்.
( தமிழீழ விடுதலைப்புலிகள் “ விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி” எனும் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டு தேர்தலில் பங்கு கொள்ள ஆயத்தமானார்கள்)
ஶ்ரீ லங்கா அரசு அதனை தவிர்த்துக்கொண்டது,
காரணம்:தமிழீழவிடுதலைப்புலிகள் ஜனநாயக தேர்தல் மூலம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆணையை பெற்று சர்வதேசத்திற்கு அதனை நிருபிப்பார்கள் என்ற காரணத்தால் ஜனாதிபதி பிரமதாசா அதனை நிராகரித்தார், - 1992,93, பாராளுமன்ற தெரிவுக்குழு
(இனப்பிரச்சனை என்ற ஒன்று இல்லை எனக்கூறி ஜனாதிபதி டீ.பி.விஜயதுங்காவினால் ஆரம்பிக்கப்பட்ட தெரிவிக்குழு)
சர்வதேசத்துக்கான கண் துடைப்பு எந்த முடிவும் இன்றி கைவிடப்பட்டது. - 1994,டிசம்பர்,19, தொடக்கம் 1995,ஏப்ரல்,15 வரை ஜனாதிபதி சந்திரிகா விடுதலைப்புலிகள் பேச்சு நான்கு கட்டங்கள் இடம்பெற்றது தீர்வுகள் இல்லை.
- 1995, ல் அரசியல் பகிர்வுத்திட்டம்.
(தமிழ்மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம்,அங்கீகரிக்கப்படவில்லை)
பௌத்த பிக்குகளின் எதிர்ப்பால் நிராகரிக்கப்பட்டது. - 2002,செப்டம்பர்,16, தாய்லாந்து,
2002,நவம்பர்,24, நோர்வே,
2003,ஜனவரி.01,நோர்வே,
2003,மே,14,ஜேர்மன்,
ஆகிய நாடுகளில் விடுதலைப்புலிகள் பிரதிநிதிகளும், அரச தரப்பு பிரதிநிதிகளும் நோர்வே அனுசரணையில் சர்வதேசத்தில் இடம்பெற்ற பேச்சுகளில் விடுதலைப்புலிகள் முன்வைத்த தீர்வு யோசனைகளை அரசு தரப்பு நிராகரித்தனர் - 2003,ல் தமிழீழ விடுதலைப்புலிகளால்
முன்வைக்கப்பட்ட இடைக்கால நிர்வாக சபை. ஶ்ரீலங்கா அரசினாலும், பௌத்த பிக்குகளினாலும் நிராகரிக்கப்பட்டது. - 2005,ல் சுனாமிக்கட்டமைப்பு
ஶ்ரீலங்கா உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டது. - 2007,ல் சர்வகட்சி மகாநாடு.
சிங்கள அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி,ஜே வி பி,மற்றும் சில சிங்கள கட்சிகள் இந்த தீர்வுத்திட்டத்தை ஏற்கவில்லை.
அதே வேளை சகல கட்சிகளையையும் பங்கு கொள்ளுமாறு அழைக்கவில்லை முக்கியமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பை ஶ்ரீலங்கா அரசு விரும்பவில்லை - 2006,ல் ஆரம்பிக்கப்பட்ட சர்வகட்சி குழு 107, தடவை கூட்டங்களை நடத்தி ஆராய்ந்து 2009, மார்ச்,15ல் தானாகவே கலைந்தது
எந்த தீர்வும் முன்வைக்கவில்லை. - 2011,ஜனவரி,10, தொடக்கம் 2011, அக்டோபர்,03, வரை தமிழ்தேசிய கூட்டமைப்பும் மகிந்த அரசின் பிரதிநிதிகளும் 18, தடவை பேச்சு இடம்பெற்றது.
பதினெட்டு தடவை பேச்சு வார்தைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தன் தலைமையிலான குழுவினர் சென்றபோது அரச தரப்பில் இருந்து எவருமே கலந்து கொள்ளாமல் தானாகவே பேச்சு வார்தையை முறித்துக்கொண்டனர். - 2015, ல் பொதுத்தேர்தலுக்கு பின்னர் 2019, வரை நல்லாட்சி எனும் பெயரில் மைத்திரி ஜனாதிபதியாகவும், ரணில் பிரதமராகவும் செயல்பட்ட காலத்தில் புதிய அரசியல் யாப்பு, அரசியல் தீர்வு விடயமாக பல குழுக்களை அமைத்து செய்படுத்தியபோது இறுதியில் ஆட்சியாளர்களால் குழப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டது.
- புதிய ஜனாதிபதியான கோட்டபாயவுடன் 2022, மார்ச்,25,ல் தமிழ்தேசிய கூட்டமைப்பு சந்திப்பு,எந்த முடிவும் இல்லை,
2022, ஆகஷ்ட்,03, டிசம்பர்,13, மற்றும் சில தினங்களில் தற்போதய ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்புகள் இடம்பெற்றாலும் எந்தப்பலனும் இதுவரை இல்லை.
குறிப்பு: வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என தமிழ் தேசிய தலைவர்கள் கடந்த 1948, தொடக்கம் தற்போது வரை பல முயற்சிகள் எடுத்தும், பேச்சுக்கள் நடத்தியும் எந்த தீர்வும் வழங்காமல் தட்டிக்கழித்தவர்கள் ஆட்சியாளர்களே என்பதே உண்மை.
இதில் நகைப்புக்குரிய விடயம் யாதெனில் 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டு மக்களின் வாக்கினை பெற்று பலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தான்தோன்றி தனமாக தமிழர்களின் இறையாண்மை மீது எதுவித அக்கறையும் கொள்ளாது கட்சியின் உயர்மட்ட குழுவில் அங்கம் வகித்த பல அடிவருடிகளின் உதவியுடன் சர்வதேசத்தின் அழுத்தங்களை இலங்கை மீது திணிக்காமல் தடுக்கும் வண்ணம் பேச்சுவார்த்தை எனும் போர்வையில் இழுத்தடிப்புக்களை செய்து தன் இனத்தை சீரழித்து சிங்கள இலங்கை அரசை இன்று வரை காப்பாற்றி தமிழீழ மக்களுக்கு துரோகத்தை செய்துவருகின்றது.
வரலாறுகள் அறியப்படவேண்டும்!




