
தாய்லந்து அரசாங்கத்தால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்குப் பரிசாக வழங்கப்பட்ட “முத்து ராஜா” என்ற யானை மீண்டும் அதன் சொந்த நாடான தாய்லாந்துக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டது.
4,000 கிலோகிராம் எடையிலான அந்த யானை இன்று காலை கொழும்பிலிருந்து வர்த்தக விமானம் மூலம் தாய்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அதற்காக 700,000 டொலர் செலவிடப்பட்டதாக தாய்லந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முத்துராஜா யானை தாய்லாந்துக்கு மீள் அழைக்கப்பட்டது எனும் மேலுள்ள செய்தி யாவரும் அறிந்ததே.
ஆனால் உண்மையான செய்தி
தாய்லாந்து அரசால் பரிசாக வழங்கப்பட்ட இந்த யானையை ஒழுங்காகப் பராமரிக்காமல் விட்டதனாலேயே அது மீளப் பெறப்பட்டது என்பதே உண்மையான செய்தி என்பதோடு
ஒரு நாடு தந்த யானையயே ஒழுங்காகப் பாக்காத நாடு எனும் அவப் பெயரை வாங்கியிருக்கிறது இலங்கை.
அதை இவர்கள் பராமரித்த விதமும் அதற்கான எதிர்ப்புகளும் அதன் பயணம் பற்றிய புகைப்படங்கள் கீழே:






