சகோதரிகள் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட முன்னர் அவர்களின் பெயரில் இயங்கி வருகின்ற சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கருத்துவெளிப்பாடுகள் கீழே:

மோடியின் அடியாட்களாக செயல்படும் திமுக அரசின் காவல்துறை தொடர்ந்து எங்கள் மீது அடக்குமுறையை ஏவி வருகிறது. இதைக் கண்டித்து சென்னை DGP அலுவலகம் முன்பாக இன்று போராட்டம் நடத்த உள்ளோம்.
(01.07.2023 மாலை 4 மணி)

நேற்று (30.06.2023) மதுரை தல்லாகுளம் SBI வங்கி முன்பு மோடி அரசின் 10 லட்சம் கோடி வங்கி ஊழலை கண்டித்து போராட்டம் நடத்தினோம். அப்போது போலீசார் கைது என்ற பெயரில் மிருகத்தனமாக நடந்து கொண்டனர். தொடர்ந்து இத்தகைய அராஜக போக்கில் காவல் துறை செயல்படுகிறது.

கடந்த 31.05.2023 அன்று சென்னை பாஜக தலைமையகமான கமலாலயம் முன்பு போராட்டம் நடத்தினோம். (பாஜக ரௌடிகள் எங்களை களத்தில் தாக்குவதை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது). அப்போது போலீசார் எங்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றாமல் ஆட்டோவைக் கொண்டுவந்து பலவந்தமாக ஆட்டோவில் ஏற்றினர். ஆட்டோவின் உள்ளே ஒரு பெண் போலீஸ் ஏறிக் கொண்டு உள்ளிருந்து அந்த போலீஸ் என் தங்கை நிரஞ்சனாவை பலமாக உள்ளே இழுத்தார். அதே சமயத்தில் வெளியில் இருந்து மற்ற போலீசார் பலவந்தமாக ஆட்டோவுக்கு உள்ளே தள்ளினர். இவ்வாறு ஒரே நேரத்தில் இரு புறமிருந்தும் ஆட்டோவுக்கு உள்ளே பலவந்தமாக பிடித்து தள்ளியதால் கால் நரம்புகள் பாதிக்கப்பட்டு வலியால் துடித்தார். அந்த நேரத்தில் வலிக்கிறது என்று கத்தியும் கூட விடாமல் போலீசார் மிருகத்தனமாக நடந்து கொண்டனர்.

ஒரு மாதமாகியும் இன்னும் காலில் வலி உள்ளது. கால் நரம்புகள் பாதிக்கப்பட்டதால்
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்தும் பயிற்சிகள் செய்தும் இந்த பாதிப்பை சரி செய்ய முயற்சி எடுத்து வருகிறார். கால் வலியோடு தான் தொடர்ந்து களப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று (30.06.2023) மதுரையில் கைது செய்யப்பட்ட போதும் சென்னையில் நடந்தது போலவே ஆட்டோவைக் கொண்டு வந்து பலவந்தமாக என் தங்கையை ஆட்டோவுக்குள் தள்ள முயற்சித்தனர். (நிறைய போலீசார் கைது செய்ய வந்தனர். ஆனால் போலீஸ் வாகனத்தை பயன்படுத்தாமல் ஆட்டோவைக் கொண்டு வந்தனர்)

வழக்கமாக போலீஸ் ஜீப்பில் கைது செய்து அழைத்துச் செல்லும் மதுரை மாநகர காவல் துறை சென்னை தி.நகரில் ஏற்கனவே செயல்படுத்திய அதே திட்டப்படி ஆட்டோவைக் கொண்டு வந்து பலவந்தமாக அதே பாணியில் இரு புறமும் இழுத்து என் தங்கையை கைது செய்ய முயன்றனர். ஆட்டோவில் ஏற முயன்ற நிரஞ்சனாவை ஏற விடாமல் தடுத்து பலவந்தமாக உள்ளே தள்ளினர்.
காலை உடைக்கும் நோக்கில் திட்டமிட்டே இவ்வாறு செயல்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொண்டதால் மிக கடுமையாக முயன்று போலீசாரின் இச் சதி திட்டத்துக்கு உடன்படாமல் எதிர்ப்பு தெரிவித்தோம். அதனால் அவர்களின்
திட்டம் நிறைவேறவில்லை. என் தங்கையை நடக்க முடியாமல் முடக்குவதற்காக திட்டமிட்டே போலீசார் இவ்வாறு தொடர்ந்து செய்கின்றனர் என்பது தெளிவாகப் புரிகிறது..

ஏற்கனவே சிறையில் இருந்தபோது தரப்பட்ட தவறான உணவு காரணமாகவும் காவல்துறை அடக்குமுறையாலும் உளவியல் நெருக்கடிகளாலும் என் அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. கடந்த 2021 ஆகஸ்டில் நல்ல ஆரோக்கியத்துடன் சிறைக்கு சென்ற அப்பா 2021 செப்டம்பரில் புழல் சிறையில் இருந்து வந்த பின்பு மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையால் காப்பாற்றப்பட்டார்.

இருந்தாலும் உடல் நிலை முழுமையாக குணமடையாததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக களப்பணிக்கு வர இயலாமல் வீட்டிலேயே இருந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இதன் காரணமாகவே என்னுடன் என் தங்கை நிரஞ்சனா களப் பிரச்சாரத்திலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

என் தந்தையை முடக்கினால் எங்களது போராட்டம் முடங்கி விடும் என திட்டமிட்டனர். ஆனால் களப்பணியில் என் தங்கை அப்பாவின் இடத்தில் செயல்படத் தொடங்கியதால் இவர்களின் திட்டம் பலிக்கவில்லை. அதனால் எப்படியாவது தங்கை நிரஞ்சனாவை முடக்கி விட வேண்டுமென்று தொடர்ந்து குறி வைத்து தாக்குகின்றனர்.

காவல் நிலையத்தில் அடைத்து வைத்து மிரட்டுவது,அசிங்கமாக ஆபாசமாக,அவதூறாக பேசுவது,பாஜக ரௌடிகளோடு சேர்ந்து எங்களைத் தாக்குவது,பொய் வழக்கு போடுவது
என காவல்துறையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. முக்கியமாக மோடி அரசின் 10 லட்சம் கோடி வங்கி ஊழலை நாங்கள் மக்களிடம் அம்பலப்படுத்த தொடங்கியது முதல் கடந்த ஓராண்டாக போலீஸ் மிக அராஜகமாக நடந்து கொள்கிறது.

இந்த அடக்குமுறைக்கெல்லாம் அஞ்சமாட்டோம். தொடர்ந்து மக்களுக்காகப் போராடுவோம்.

-நந்தினி ஆனந்தன்

இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது அந்தப் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்