
இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்ததே, யாழ். தையிட்டி விகாரைக்கும் நடக்கும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (29.06.2023) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது மைத்திரிபால சிறிசேனாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் கூறியுள்ளதாவது, வடக்கு, கிழக்கிலுள்ள சைவப் பகுதிகளில் பிற மதத்தவர் அடாத்தாகக் கட்டுகின்ற மத தலங்கள் அனைத்தும் பாபர் மசூதிகளே.
சைவ சமயத்திற்கு முன்னுரிமை
இலங்கையிலுள்ள இந்துக்களுக்கு இந்தியாவிலுள்ள 120 கோடி இந்துக்கள் ஆதரவாக உள்ளனர்.
ஒவ்வொரு சிவலிங்கத்தின் மீது பிற மதத்தவர்கள் கைவைக்கும் பொது காஷ்மீரில் இருந்து கதிர்காமம் வரைக்கும் உள்ள ஒவ்வொரு சைவர்களும் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் பாபர் மசூதிகளை உருவாக்க வேண்டாம். அத்துடன், பௌத்த சமயத்திற்குக் கொடுக்கும் முன்னுரிமையை விடவும் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.
மைதிரிபால சிறிசேன உண்மையில் சைவர். ஆனால் அவர் உலக்திற்காக பௌத்தராக வாழ்ந்து வருகின்றார் என்றும் மறவன்புலவு சச்சிதானந்தன் மைத்திரிபால சிறிசேனாவிடம் கூறியுள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

