
காத்தான்குடி பொலிசார் நேற்று இரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஐஸ் வியாபாரியொருவர் ஓரு தொகை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.எஸ்.ஏ.றஹீம் உறுதி செய்துள்ளார்.
நேற்றிரவு 9.00 மணியளவில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில் வாகன உதிரிப்பாக வர்த்தக நிலையமொன்றில் வைத்து விற்பனைக்காக பொதிசெய்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் பொலிசார் குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 6920 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்தும் கருவியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் ஐஸ் போதைப் பொருளும் நாளை மட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிதனர்.
கைதான நபர் ஓல்லிக்குளத்தைச் சேர்நதவர் எனவும் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
