
மன்னாரில் ஹஜ்ஜு பெருநாள் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (29) இஸ்லாமியர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றுள்ளன.
மன்னார், மூர் வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்று காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும், காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் ஹஜ்ஜு பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன.
இத்தொழுகை நிகழ்வுகள் மூர் வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றன.
இதன்போது ஹஜ்ஜு பெருநாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள் எடுத்துக்கூறப்பட்டதோடு, விசேடமாக, துவா தொழுகைகளும் இடம்பெற்றது.
அத்தோடு, மன்னார் மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


