புத்தளத்தில் இன்று  (29) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்   படுகாயமடைந்துள்ளார். புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த அவர் புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பயணித்த வாகனம் மரமொன்றின்மீது மோதியதால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்