
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் துபாயில் மறைந்திருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரொருவரின் தலைமையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 33 வயதுடைய இலங்கைப் பெண்ணின் நான்கரை மில்லியன் ரூபா வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சட்ட விரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேபோன்று குறித்த பெண்ணை கைது செய்யும்போது சந்தேக நபரிடமிருந்த 18 இலட்சத்து 75,000 ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் தொடர்பில் சட்ட விரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு, மொரட்டுவ நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.