2016ஆம் ஆண்டு மலேரியாவை ஒழித்த நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் மலேரியா பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட 20 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளளனர்..

எஞ்சிய 17 பேர் இலங்கையர்கள் எனவும், அவர்கள் ருவாண்டா, தெற்கு சூடான், உகண்டா, தான்சானியா, சியரா லியோன் மற்றும் கினியா ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மலேரியா தொடர்பான சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் 071 – 284 1767 மற்றும் 0117 626626 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்குத் தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்