
லண்டனில் பிரித்தானியா இந்தியா வாரம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பிலான வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய நடிகையான சோனம் கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரபல இந்திய நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர் தற்போது தன் குடும்பத்துடன் லண்டனில் வாழ்ந்துவருகிறார்.
பிரித்தானியா இந்தியா வாரம் 2023இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்குமிடையிலான நீண்ட கால உறவை கௌரவிக்கும் மற்றும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பிரித்தானியா இந்தியா வாரம் 2023 என்னும் நிகழ்ச்சி, இம்மாதம், அதாவது ஜூன் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை கொண்டாடப்படுகிறது.

இரு நாட்டு அரசியல், வர்த்தகம், தொழில், புதிய கண்டுபிடிப்புகள் முதலான பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்படுவதற்கு இந்நிகழ்ச்சி வழிவகை செய்துகொடுக்கிறது.
சோனம் கபூருக்கு அழைப்பு
பிரித்தானியா இந்தியா வாரம் 2023 நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, இன்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சோனம் கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கும் சோனம் கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.