ஜே.வி.பி  கிளர்ச்சி காலத்தின் பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை குழப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொலிஸ் ஆவணங்களை மாற்றினார் என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.

கொழும்பில் நேற்று வெளியான ITJP யின் அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது

ஜே.வி.பி. காலத்தில் தான் பணியாற்றிய பகுதிகளில் பலர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை குழப்புவதற்காக கோட்டாபய ராஜபக்ச காவல்துறை ஆவணங்களில் மாற்றங்களை செய்து உண்மையை மறைக்க முயன்றார் என வெளியாகியுள்ள புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

2013 இல் மாத்தளையில் பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அந்த பகுதியில் உள்ள காவல்துறை நிலையங்களில் உள்ள ஐந்து வருடங்களிற்கு முந்தைய அனைத்து ஆவணங்களையும் அழித்துவிடுமாறு பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய வேளை கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டார் என வெளியாகியுள்ள புதிய அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

அந்த மனிதபுதைகுழிகள் 1988-89 ஜே.வி.பி. கிளர்ச்சி காலத்தை சேர்ந்தவை என்ற சந்தேகம் காணப்படுகின்றது.

அக்காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச இராணுவ வீரராக அந்த பகுதியில் கடமையாற்றினார் என தெரிவித்துள்ள அறிக்கை, விசாரணைகளில் தலையிட்டு குளறுபடிசெய்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் காவல்துறை அதிகாரிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அறிக்கையின் முழு வடிவம்,

Click to access Tamil-Mass-graves-v-2.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்