


முல்லைதீவு குருந்தூர் மலைப்பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில வருகை தருவதை முன்னிட்டு தமிழர்கள் தங்கள் காணி விடுவிப்பினை வலியுறுத்தியும் நீதிமன்ற வழக்கினை நடைமுறைப்படுத்த கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
குருந்தூர் மலைப்பகுதியில் இன்று காலை கூடிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இராணுவத்தினரின் பங்களிப்புடனேயே குறித்த விகாரையின் பணிகள் இடம்பெற்றது என்பதை அங்கு புதிதாக பதிக்கப்பட்ட கல்வெட்டு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயத்தில், குறித்த குருந்தூர் மலை பிரதேசத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.