
பிரித்தானியாவில் தமிழீழ தேசியக் கொடிக்கு எவ்வித தடைகளும் இல்லை. அதனை எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்தலாம் என பிரித்தானிய காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பிரித்தானியாவின் IHG Continental Park Lane Hotel முன்பாக புலம்பெயர் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டத்தின் போதே இவ்வாறு அதிகாரியினால் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கள் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டு முதலில் பிரித்தானியா சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பிரான்சில் நடைபெறவுள்ள புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.