நாம் யார்
சுவிஸ் தமிழர் தகவல் மையம் – நாம் யார்?
சுவிஸ் தமிழர் தகவல் மையம் என்பது சுவிஸ் வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு இணையத்தளம் ஆகும்.

அனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், சுவிஸ் நாட்டில் பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து சுவிஸ் தமிழ் மக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன் ஜேர்மன், பிரன்சு, இத்தாலி மற்றும் தாயக தமிழ், சிங்கள மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.